மண்ணோடு மண்ணாக

உன்னிலிருந்தே உருவாக்கி
உயிர்பெற்று உடலோடு
உன்மீதே உலாவி திரிந்து
உயிர்பிரிய உடல்சரிய
உனக்குள்ளே அடக்கமாகி
நீயாகவே உருமாருவேன்

உயரமான கோபுரத்தின்
உச்சியிலே நின்றாலும்
உலகமே பார்ப்பதற்கு
சிறியதாய் தெரிந்தாலும்
உன் தாங்களிலேதானிது
என்றும் சாத்தியமாகிறது

விஞ்ஞான வளர்ச்சியாலே
வளிமண்டலம் பறந்தாலும்
அஞ்ஞான கிளர்சியாலே
அதிகாரம்தான் செய்தாலும்
ஆடி நீ முடிந்த பின்னே
அடைக்கலமாய் என்னில்தான்

மண் படைப்பின் மூலக்கரு
மண் படைப்பினத்தின் தளம்
மண் விளைவதும் இங்கேயே
மண் புதைவதும் இங்கேயே
மண் இதற்க்கு மாண்டவர் பலர்
மண் மாட்சியோடு ஆண்டவர் சிலர்

என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Mar-14, 2:47 pm)
பார்வை : 713

மேலே