புத்தி வருமா

குடிச்சு குடிச்சு குடல் வெந்தா
குடித்தனம் எப்படி பண்ணுவது ?

படிச்சு படிச்சு சொன்னாலும்
பதியலையே உன் மனதில் ...!

அடிச்சு அடிச்சு துவைச்சுப் போட
அடிமாடா உன் மனைவி ?

வடிச்சு வடிச்சு போட்டவள
வடிய வடிய வைப்பாயோ ?

இடிச்சு இடிச்சு உரைத்தாலும்
இதய மதை ஏற்காதோ ...?

துடிச்சு துடிச்சு செத்தாதான்
புத்தி வரும் போலிருக்கே ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Mar-14, 4:32 pm)
Tanglish : puthi varumaa
பார்வை : 107

மேலே