மழை குடை

தென்றலோடு
காற்று நடனமாடுகிறது
நடைபாதையில்
=== ==== ====
காற்றுடன்
குடைபிடிக்க வானத்தில்
ஒன்று சேர்கிறது
மேகங்கள்
==== ==== ====
அறிந்தும்
அறியாமல் தெரிந்தும்
தெரியாமல்
==== ==== ====
புரிந்தும்
புரியாமல் மறந்தும்
மறவாமல்
==== ==== ====
இரு உள்ளங்கள்
தனை மறந்து தனிமையில்
கவிபாடுகிறதே............!
==== ==== ====
ஒளிரும்
வெளிச்சம் பட்டுவிடுமோ
அவளின்
அழகிய தேகம்
வெந்துவிடுமோ...........!
==== ==== ====
கவலை கொள்ளும்
மனதை மனம் பொறுக்கச்
சொல்கிறேன்
==== ==== ====
அவளை தாங்கி
குடையும் பிடிக்கின்றேன்
==== ==== ====
அவள் தேகம்
சுடுவதை அறிந்து
=== ==== === ===