உன் வார்த்தை என் மரணவார்த்தை 555

பெண்ணே...

என்னை கண்டதும்
உன் இதழ்களால்
நலம் விசாரிபத்து போல்...

ஏளிதாக
சொல்லிவிட்டாய்...

உன் இதயம்
வலிக்காமல்...

உன் வார்த்தையை
நான் கேட்டதும்...

என்னை நானே
மறந்தேனடி...

உன்னைவிட்டு
தள்ளிபோ என்ற...

உன் மரண
வார்த்தையை கேட்டதும்...

வீசும் தென்றலை
தொட்டால் தான்...

பூக்கள் மலரும்...

நிலவினை கண்டால்தான்
அல்லியும் மலரும்...

மண்ணில் இடம்
கொடுத்தால்தான்...

விதைகள் முளைக்கும்...

விலகி இருந்தால்
அன்பு கூடும் என்றால்...

காத்திருப்பேனடி
நான் உனக்காக...

மரண வார்த்தை
கொடுதாயடி எளிதாக...

என் இதயமோ
இருட்டறையில் கதறுதடி...

என் நெஞ்சிக்குள்ளே...

உன் மணநாள் வரை
நான் ஜீவித்தால்...

உன்னை வாழ்துவேனடி
பிரியமுடன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Mar-14, 4:57 pm)
பார்வை : 852

மேலே