உலக வன நாள் இன்று
உலகில் வனங்களும் ஓர்அங்கமாம்
உயிரினங்கள் பலவற்றின் புகலிடமாம்
உயர்ந்த தருக்களின் வசிப்பிடமாம்
உயிர்வளி நிறைந்தது கானகமாம் !
புறவு பொதும்பு குறுங்காடாம்
அடவி என்பதும் வனம்தானாம்
அமைதியும் இருளும் குடிகொள்ளும்
அச்சமளிக்கும் அடர்ந்த வனம் !
வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும்
மண்ணின் அரிப்பை அதுதடுக்கும்
விலங்கினம் பலவற்றின் இருப்பிடமாம்
மூலிகை வளமும் அதிலடங்குமாம் !
வனவளம் காப்பது நம்கடமை
வனத்தை அழிப்பது மிகமடமை
கானகம் என்றும் பொதுவுடைமை
அழித்தால் குறையும் மழைவளமை....!!