மனிதாபிமானம் மறந்தவர்களே

பிறந்தாய் குழந்தையாய்
வளர்ந்தாய் மனிதனாய்
வாழ்ந்தாய் மிருகமாய்
மாண்டாய் கைப்பிடி மண்ணாய்........

இருக்கின்ற பொழுதிலே எதுவுமே செய்யல
நீ இறந்த பொழுதிலே யாருமே அழுவல
உனக்கென்று வாழ்ந்து மாண்டாய் மனிதனே
ஊருக்கு என்ன செய்தாய் மனிதனே .......

அடுத்தவனின் உடமையை உனக்கென ஆக்கினாய்
அவனது இன்பத்தை அலட்சியம் செய்தாய்
உனது நிம்மதி பெரிதாய் போனது
மற்றவரின் நிம்மதி வீணாய் ஆனது ......

கடவுளை கடத்தினாய் காசுக்காய் மனிதா
நல் கருணையை இழந்தாய் காசாலே மனிதா
தெருவிலே விழுந்தபொழுது காசா வந்து
உன் உயிரினை காப்பாற்றி நலமோ தந்தது ......

நீசெய்த தவறினை மறந்து போனாய்
பிறரது தவறினை பெரிதாய் சொன்னாய்
இனிதாய் பேசிட நாவுதான் இருக்குது
எல்லாம் மறந்து ஏசியே பழிக்குது .......

உன்னை பெற்ற தாயையும் மறந்தாய்
உலகிலே அவரையோ துறந்திட துணிந்தாய்
அன்னை என்கிற அற்ப்புத உறவை
அநாதை ஆக்கி அலட்சியம் செய்தாய் ......

வெளிப்படையில் மனிதனாய் வேடமோ போட்டாய்
உள்ளுக்குள் மிருகத்தின் குணத்தினை கொண்டாய்
காட்டிலே வாழ்ந்திடும் மிருகத்தை போலவே
நாட்டிலே வாழ்ந்து நடித்தே சென்றாய் .....

மனிதனின் அடையாளம் மனிதாபிமானம்
அதை மறந்திட்ட மனிதனோ வாழ்வதோ சாபம்
திருந்தி நீ வாழ்ந்திடு திருப்தியோ சேரும்
வாழ்வில் திருப்பங்கள் தோன்றியே நிம்மதி தோன்றும்.

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Mar-14, 11:02 am)
பார்வை : 170

மேலே