நண்பன்
நசுங்கிய இதயத்தின்
குருதி ஆறு ...
இவன் இல்லாத
இடத்தினிலே ஏது சோறு ..
எந்த ஒரு தலைவனுக்கும்
உண்டு -ஒரு தோழன் ...
தோழனின்றி வாழ்பவன்
கைகளின்றி அலைபவன் ..
ஒரு நாள் ...
கருத்த மேகம் சூழ்ந்தது
வானம் இடி முழங்கியது
துளிகள் என்னை நனைத்தன .
ஓதுங்க ஒரு இடம் இல்லை
நனையத்துவங்கினேன்..
தூரல் தாண்டவம் தொடங்கியது
பேய் மழை ஆனது
இயற்கை மீறியது
தாக்குபிடிக்க சக்தி இல்லை
துவண்டு போனேன்
மழை நின்று போனது
நிமிர்ந்தேன்
குடையோடு நண்பன்
அவன் நனைகிறான்
எனை நனைக்கிறான்
நினைக்காத நிமிடங்களில்
குடையோடு வந்து
தடை செய்தான் மழையை...
நெருங்கிய நட்பின்
காரணமாய்
கண்ணில் மழை
துளிர்த்தது
அவன் சொன்னான் ..
நண்பா
மழையில் உப்பு சேர்க்காதே
உப்பு நீர் உலகில் அதிகம் ...என்று
வியர்வையோடு வீடு வந்தேன்
சிந்தித்தேன்
உலகில் நண்பர்கள் அதிகம்....
நானும் நண்பனாய் க நிலவன்