விட்டு கொடுங்கள்

என் நண்பர் ஒரு வர் வீட்டில் அவரது இரண்டு வயது குழந்தை ஒருநாள் அவரது மனைவியின் கைபேசியை கீழே போட்டு ஒடித்து விட்டது, அந்த சமையத்தில் அவர் வீட்டில் இல்லை. அவர் வீட்டுக்கு வந்த பிறகு கைபேசி உடைந்து போனதாக அவரது மனைவி தெரிவித்தார், அவர் அதை கேட்டவுடன் அவர் மனிவியை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார், இதனால் இருவரின் நடுவில் சண்டை வலுத்தது, அந்த சண்டை அப்படியே அந்த வரம் பூரா நீடித்தது, இருவரும் பேசி கொள்ளவே இல்லை, அந்த வாரம் முழுக்க அவர் வீட்டில் சாப்பிடவே இல்லை.

இவர் இருவரின் பிரச்சனையை தொடர்ந்து, அடுத்த முன்றாம் நாள் அவர்கள் நான்கு வயது மகனில் பிறந்தநாள் வந்தது, அனால் இவர் இருவரின் சண்டையில் அந்த குழந்தையில் பிறந்தநாளை இர்ருவரும் மறந்து விட்டார்கள், புது உடை அணிந்து சந்தோஷமாக பள்ளிக்கு போகவேண்டிய குழந்தை அன்று பள்ளி உடையை அணிந்து பள்ளிக்கு சென்றான், அவன் பள்ளிக்கு சென்ற பிறகுதான் அந்த தாயிக்கே நியாபகம் வந்தது அன்று அவன் பிறந்தநாள் என்று.

இத்தகைய பிரச்சனைகள் அவவபோது நம் குடும்பங்களில் நடந்துகொண்டே இருகிறது, பெரும்பாலும் எல்லா குடும்பங்களில்லும் இதுபோல சிறு சிறு பிரச்சனைகளை பெரும் பிரச்சனையாக இழுத்து விட்டு, ஒருவருக்கு ஒருவர் முகம் திருப்பிக்கொண்டு போவது இன்று வழக்கமாகி விட்டது.

அங்கு உடைத்து ஒரு சாதாரண 1000 ரூபாய் கைபெசிதான், அதை மீண்டம் அவரால் வாங்க முடியாத நிலையில் ஒன்றும் அவர் இல்லை, அதைவிட 10 மடங்கு பணம் கொடுத்து இன்னொன்றை வாங்க கூடிய நிலையில்தான் அவர் இருக்கிறார், அப்படி இருந்தும் அவர், அவர் மனிவியை திட்ட வேண்டிய அவசியம் என்ன..? இதுவே அவரது நண்பர்கள் யாராவது உடைத்திருந்தால் அவர் இவ்வாறு சண்டை போட்டிருப்பாரா, கண்டிப்பா இருக்காது, போன்னா போகட்டும் விடு வேறை ஒன்றை வாங்கி வாங்கிக்கலாம் என்று சொல்லி இர்ருப்பர், அனால் இதை போல் அவர் ஏன் அவர் மனைவிடம் நடந்து கொள்ளவில்லை...?

பெரும்பாலும் நாமில் பலரும் இதுபோல்தான் நடந்துகொள்கிறோம், வெளி உலகத்தில் நறைய விஷையங்களை விட்டு கொடுக்கிறோம், அனால் வீட்டுக்குள் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட பெரிதாக கோபித்து கொள்கிறோம், நாம் எப்போதும் வேறு மனிதர்ருக்கு செலவழிக்கும் நேரத்தில், ஒரு பங்கு கூட குடும்பத்திற்கு ஒதுக்குவதே இல்லை,நம் வீட்டில் இருபவரிடம் விட்டு கொடுத்து போவதில் எந்த தவறோ அல்லது அவமானமோ கிடையாது, அவர் போன போகட்டும் வேறு ஒன்றை வாங்கிகொல்ள்ளலாம் என்று சொல்லியிருந்தால், கணவன் மனைவிக்குள் ஒரு வாரம் பிரச்னை வந்திருக்காது , அந்த பிஞ்சு குழந்தையும் தன் பிறந்தநாளை இழந்திருக்கிறது.

இப்படி சின்ன சின்ன விஷயங்கல்லுக்கு நாம் வீம்பு பண்ணுவதால் நாமும், நம்மால் நம்மை சுற்றி இருப்பவர்கள் இழப்பது நறைய பெரிய விஷையங்கள், நம் வீட்டில் இருப்பவர்கள் நமக்காக வாழ்கிறவர்கள் அவருகளுக்காக சின்ன சின்ன விஷயங்களை விடு கொடுங்கள் அது அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தை தரும்.

விடு கொடுத்து நடக்க கூடிய வாழ்கை பாதையில்தான் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இடம் கிடைக்கும்.

எழுதியவர் : நாகராஜ் (23-Mar-14, 7:26 pm)
சேர்த்தது : Nagaraj-23
Tanglish : vittu kodungal
பார்வை : 190

சிறந்த கட்டுரைகள்

மேலே