அன்பே அன்பே கொல்லாதே

பெண்ணே !பெண்ணே !
மண்ணில் விழுந்த மழையே நீயும்
என்னுள் விழுந்த காதலடி ...

வானில் பறந்து விண்மீன் பிடித்து
மூக்குத்தியாக ஒளிர வைப்பேன்!
அருவியை அழைத்து கூந்தலில் முடித்து
கருமேகம் கொண்டு நான்மறைப்பேன்...!

எதுவோ ஒன்று குறைவது கண்டு
இயற்கையையெல்லாம் வரவழைப்பேன்!
கதிரவன் உடைத்து கால்பங்க்கெடுத்து
தங்கத்தை குழைத்து
நெற்றியாய் நானும் ஒளிரவைப்பேன்...!

கடலில் துள்ளும் கெண்டையை பிடித்து
இரு கண் குளத்தில் நீந்த செய்வேன்!
மொத்த ரோஜா மலர்களை கசக்கி
உன் இதழ்களாக நான் வடிப்பேன்...!

அடடா இத்தனை அழகா என்றே
மெய்மறந்து பார்த்து பார்த்து நான்ரசிப்பேன்...!
இன்னும் உந்தன் அழகை கூட்ட
நெஞ்சை கசக்கி நான் தவிப்பேன்!!

முழு சந்திரன் பிடித்து இரு துண்டாய் உடைத்து
கோபுர கலசத்தை ஒளிரச் செய்வேன்!
உன் இதயத்தை எடுத்து
பொல்லாமையை விடுத்து
கடலலைதனை சிறைப்பிடிப்பேன்...!

வெண்சங்கெடுத்து வெள்ளியாய் இழைத்து
உன் பாதத்தில் நானும் ஒலிரச் செய்வேன்!
எத்தனை இயற்கையை பார்த்தும் கூட
உந்தன் இடையாய் எதுவும் தோனலடி...!!

மின்னலை பிடித்தால் என் கண்பறித்தால்
நான் என்செய்வேன் கூருமடி!
காவிரி அழைத்து மேனியில் தவழ்ந்திடசெய்து
அதன் நெளிவினில் நானும் இடை ரசிப்பேன்!!

அடடா அடடா இத்தனை அழகா !
அன்னை மடியில் தவழ்ந்தது போலே
உந்தன் மேனியெங்கும் பரவிக் கிடப்பேன்
அப்படி அமையா வாழ்வை எண்ணி எண்ணி
நித்தம் நித்தம் தீக்குளிப்பேன் !!

எழுதியவர் : கனகரத்தினம் (24-Mar-14, 10:12 am)
பார்வை : 164

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே