நாவலில் வரும் நாயகி 3
பாவலன் கவிதைப் புத்தகமே
------------பாவையரும் பார்த்திடும் பேரெழிலே
ஆவல் கொள்ளுதடி உள்ளம்
------------திருப்பித் திருப்பி பார்த்திடவே
நாவலில் வரும் நாயகிபோல்
------------நயனங்களில் நீலம் உடையவளே
தாவல் புரியுதடி நெஞ்சம்
------------தத்தித் தவிக்குதடி நித்தம் .
----கவின் சாரலன்