கண்ணீர் வடிக்கிறேன் mh370

சொட்டுச்சொட்டாய்
கண்ணீர் வந்து கொண்டிருந்தது...
நேற்று மாலையிலிருந்து
கண்களில் குருதி வழிகிறது ...

எங்கோ பறந்து கொண்டோ ,
தரையில் படுத்துக்கொண்டோ ,
இருக்கும் ,..
என கற்பனை குதிரைகள்
சுற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில்
மூழ்கிப்போனது அந்த பொன்வண்டு,..
அதை மூழ்கி எடுக்க யாருண்டு?

உலக வரைபடத்தில்
எல்லா இடத்திலும் தேடியும்
கண்களில் சிக்காமல் மறைந்திருந்தாய் ...
நிஜமென்ன சொல்லிவிடு ...
நீருக்குள் என்ன விளையாட்டு?
வந்துவிடு....

உயிர்கள் பெயர்கள் தெரியும் - இருந்தாலும்
இப்போதைக்கு உன் பெயர்
மட்டும் தான் தெரியும் ...

எங்கள் பிரார்த்தனையின்
நீளம் அதிகம் ...
அது உன் காதுகளுக்குள்
விழுவது சிரமம் ...

நம்பிக்கை இழக்கவில்லை
நகர்ந்து வா...
எங்கள் நாசியின் மூச்சில்லை
கொண்டுவா...

நீ நீர் மூழ்கிக்கப்பல் இல்லை
தெரியுமா?
நீ நீச்சல் அடிக்க துடிப்பது
சாத்தியமா?

மரணத்தின் வாசத்தை
எங்கு ஒழித்து வைத்திருந்தாய்?
அதைக் கறைப்பதக்கு இடமா இல்லை ?
ஏன் ஓடி ஒழிகிறாய்?

எங்கள் விசும்பல்கள் தீர
வருடங்கள் ஆகும்.
அட இறைவா?
மீண்டும் ஒரு வாய்ப்பு
கொடுத்தால் குறைந்தா போகும்?

என்றும் தீராத வலிகளோடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (25-Mar-14, 6:14 pm)
பார்வை : 118

மேலே