என் அம்மாவிற்கு

அன்பு அம்மா அனுஷியாவிற்காக

விட்டுகொடுத்தலை முதன்முதலில்
கற்றுக்கொடுத்தவள் நீதான்

அன்பும் பாசமும் என்னவென்று
அர்த்தம் கண்டது உன்னில்தான்

மரியாதை வேறு தோழமை வேறு
என்று உணர்த்தியத்தில் உனக்குநிகர்
எவருமிலர்

கண்டிப்பைக்கூட கனிவாகப்
பயிற்றுவித்தவள் நீயே

பொறாமைப்படாத நாளே இல்லை
தந்தை நம் நட்பைப் பார்த்து

தினமும் உன்னைப் படித்தாலும்
புதிய பக்கங்கள் உருவாகிக்கொண்டே
போகின்றன உன்னில் நான் கற்க

காதலாம் உன் அன்பை வேறோருத்தியிடம் பெறமுடிந்தால்
எழுதிவைத்துகொள் எனக்கு காதலியே கிடைக்கமாட்டாள்
என்று

என்னை விட சிறந்த மகன் உனக்குக் கிடைக்கலாம்
ஆனால் உன்னிலும் மேலான தாயை நான்
எங்கும் காணேன்

“உயிர் உள்ள வரை நீயே என் உயிர்த்தோழி”
என்றும் உன் அன்பு மகன்

-செல்வக்குமார்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (26-Mar-14, 12:14 am)
பார்வை : 70

மேலே