முதுமையின் முனுகள்
முகமெல்லாம் ரேகை
முடங்கிப்போன பார்வை
களையிழந்த தேகம்
கையேந்தும் சோகம் ........
உடலுருக்கும் கோடை
உயிர்த்தேவை தேடி
காலணிகள் மறந்து
கால்களது நடக்கும் ........
பிள்ளைகளோ வெறுக்க
பெற்றநன்றி மறக்க
உறவேதும் இல்லை
உணவுகூட இல்லை .........
ஒருவேளை சோறு
சோதனைதான் பாரு
வேதனைகள் கலந்த
தெவிட்டாத சோறு .....
தெருத்தெருவாய் அலைந்து
தேகமெல்லாம் இளைத்து
நரம்பெல்லாம் தளர்ந்து
நாடியது குறைய ...
கருணைதேடும் பார்வை
கண்களிலோ ஈரம்
பிள்ளைகளை நினைத்து
பெரும்துன்பம் சேரும் .......
அல்லாடும் வயதில்
ஆறுதலோ இல்லை
அவர்களையே தேற்ற
வேறுயாரும் இல்லை .....
ஒய்ந்துபோன தேகம்
தேய்ந்துபோன பாதம்
காசுக்காக சுற்றி
கால்வளித்தது போதும் .....
இரக்கமதை கொள்வோம்
உறுதியதை ஏற்ப்போம்
பெற்றவரை என்றும்
பேணி நாம் காப்போம் .......