காதலின் உயிர் எழுத்து இலக்கணம் 555

உயிரே...
அன்பே
என் ஆருயிரே...
இன்பம் தரும்
கங்கை நதியே...
ஈடில்லா என்
பெரும்செல்வமே...
உன்னை என்னில்
நினைத்த நாள் முதல்...
ஊரறிய உன்னை
மணமேடையில் கரம்
பிடிக்க ஆசையடி...
என்னுடன் நீ நடை போடும்
ஒவ்வொரு நாளும்...
ஏக்கத்துடன் பாக்குதடி
வான் நிலா...
நிலவின் தங்கை
நீ என்று...
ஐம்புலன்களும் நீ
இன்றி அசையாதடி
என் உலகில்...
ஒன்றோடு ஒன்றாக நாம்
சேரும் அந்நாளில்...
ஓடிவருமடி கங்கையும்
காவிரியும் கைகோர்க்க...
ஔவ்வையின்
ஆத்தி சூடியாய்...
நம் வாழ்வு
அமையவேண்டுமடி...
நம்மை பார்த்து ஓர்
இலக்கணம் உருவாக வேண்டுமடி...
அழகிய காதலின் உயிர்
இலக்கணமாய்.....