புன்னகையின் ரகசியம்

..."" புன்னகையின் ரகசியம் ""...

சிரிப்பு சிரிப்பு இது நமக்கு
இறைவன் கொடுத்த வரம்
குழந்தையாய் சிரித்தபோது
மகிழ்ந்தேன் குறும்பு செய்த
காலத்தில் ரசித்திருந்தேன்
அறியேன் நானன்று நாளை
இச்சிரிப்பு சொல்லில்ல என்
வேதனை மூடிமறைக்கும்
பொய் முலாம் பூசிவரும்
திரையாகும் வேஷமென்று
சாந்தமான சிரிப்பிற்கு
பின்னால் சங்கிலியால்
பிணையுண்ட முகம்
சாட்டையடியாய் வசவு
சொற்களால் சுரமிழந்த
ராகமாய் ஓலமிடுகிறது
கேட்பாரின்றி மீட்டப்படா
நாணில் தூசி படிந்த
வீணையாய் மூலையில்
ஊமையின் மொழியாய்
சொல்ல முடியாமலே
புழுங்கும் கொல்கட்டையாய்
ஆவி துடிக்க நீராவியால்
வியர்த்து வெந்துகொண்டு
மூச்சிரைக்க ஓடிவந்தும்
எல்லைகடக்க முடிவில்லை
சிரிப்பொன்று இல்லாவிடில்
சிதைந்திருப்பேன் எப்போதோ

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (30-Mar-14, 1:31 pm)
பார்வை : 60

மேலே