நட்பின் தாய்
நண்பா ..
ஒன்றாம் வகுப்பிலிருந்து
ஒன்றாய் திரிந்தோமே ...!
உருவம் வேறு
உள்ளம் ஒன்றாய் ...?!
காதல் வந்ததும்
கண்ணை தொலைத்தவனே ...
எப்படி மறக்க முடிந்தது
எல்லாம் உன்னால் ...
நீ விழுந்தது
விதையாக அல்ல ...சதையாக ...!!
அந்த
தாவணி முடிச்சிலா..
நம் நட்புக்கயிற்றை
நழுவ விட்டாய் ..???
சினுங்களிலா
சிகரத்தை உடைத்தாய்..???
கொலுசின் சத்தத்திலா
கொன்று புதைத்தாய் நட்பை ???
மண்ணில் விழுந்து
மரத்தில் தாவி ..
மாங்கனி திருடி ..
மத்தியான சோற்றை
மனம் ஒப்பி பகிர்ந்து ...
சிரிப்பிலும் .. சீட்டிலும்
சிலகாகித்து கிடந்து...
கல்லூரியிலும் சினிமா தியேட்டரிலும் ..
கதியென கிடந்த நம்மை ..
காதலா பிரித்தது...??
நட்பின் ஆழம் தெரியாத
நண்பா...
எண்ணிக்கொள் ...
எப்போது வேண்டுமானாலும்
சரிந்து விடலாம் உன் காதல் கோட்டை ..
இருட்டை
நீ
நிலவென்று நம்புகிறாய்..
கவனம் கொள் நண்பா ..
கண் கெட்ட பிறகும்
இந்த
சூரியன் உனக்காய்
சுடர் விடும் ..
பரவாயில்லை ... தைரியமாயிரு
அப்போதும் நீ
தோள் சாய்ந்து அழ
இந்த
நண்பன் தயார் ..நட்பின் தாயாய் ..!!!