காதல் ராஜ்ஜியம்

சிணுங்கியது
உன் கால் கொலுசு ...
சிம்பொனி என்று
அங்கீகரித்தது இதயம் ...

உதிர்ந்த உன் புன்னகையை ...
நட்சத்திரங்கள் ஆக்கிகொண்டது
வானம் ...

பேசிய வார்த்தை
காதல் சாம்ராஜ்யியத்தின்
தேசிய கீதமானது ...

காற்றில் கசியும்
உன் கலர் தாவணி
வான வில்லுக்கு
வரம் தந்தது ..

நேற்று முதல்
மறந்து போனாய்
என் புனர் ஜென்மம்
பூஜ்ஜியமானது..!!

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 7:15 pm)
Tanglish : kaadhal raajjiyam
பார்வை : 116

மேலே