தேர்தல் ஜோக்ஸ்
தலைவர் தேர்தல் சின்னமா ரூபாய் நோட்டைக்
கேட்கறாரே...ஏன்?
-
அப்பதானே வாக்காளர்கள் கிட்ட தைரியா
நோட்டை நீட்டலாம்..!
-
>அம்பை தேவா
-
-------------------------------------------------
-
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு
கெடுபிடியா இருக்கக் கூடாது..!
-
என்ன விஷயம் தலைவரே..?
-
அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!
-
>வைகை.ஆறுமுகம்
-
----------------------------------------------------
-
தலைவர் லோகல் பாலிடிக்ஸை டச் பண்ணவே
மாட்டாராம்..!
-
அதுக்காக டென்மார்க் நாட்டை இரண்டு
ஃபைவ் மார்க்'கா பிரிக்கணும்னு அறிக்கை
விடுறது நல்லாவா இருக்கு...!
-
>ஜோ.ஜெயக்குமார்
-
=======================================
நன்றி: குங்குமம்