எதிர்பாரா வரவு
நேற்றிரவு உன்னை நினைத்து கொண்டே
படுக்கையில் உறங்கும் நேரம்
உனது தொலைபேசி அழைப்பால் முழித்தேன்.....
வீட்டின் வெளியே பார்க்க சொன்னாய்
ஆச்சரியம் உனது எதிபாரா வருகை.....
எப்போது எப்படி வந்தாய்
என கேட்க தோன்ற வில்லை.......
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்
ஒருநொடி நான் இவ்வுலகிலேயே இல்லை.......
உனது குரல் தான் மறுபடியும்
இவ்வுலகுக்கு என்னை வர செய்தது.........
நீ நிறைய பேசினாய்
என் கைகளை பற்றி கொண்டு
யாரும் இல்லா அந்த இரவில்
என் தோளில் தலை சாய்ந்து நடை போட்டாய்
எனது இதயம் ரெக்கை கட்டி பறந்தது........
நட்சத்திரத்தின் ஒளியில் இருவரும்
பூங்காவில் அமர்ந்து நேரம் கழித்தோம்
யாரும் இல்லா தனிமை
நம்முள் செய்த மாற்றம்
என் அருகே நீ வளைந்து கொடுத்து
முகத்தோடு முகம் தேய்த்து
முத்தங்கள் பல தர செய்தது.........
உன் இதழ் என் இதழ் நோக்கி
நெருங்கி வர எனது
எதிர்பார்ப்பு எகிற
பாழாய் போன நண்பன் குறுக்கிட்டான்.
"எந்திரி டா டைம் 8 ஆச்சு... ஆபீஸ்கு கெளம்பனும்..."
அபொழுது தான் உணர்ந்தேன்
அனைத்தும் கனவென்று..............
போர்வையை விலக்கி எழுந்ததும்
என் நண்பன் என்னை ஆச்சர்யமாய் பார்த்தான்......
என்ன டா என்று கேட்டேன்......
உன் முகத்தில் உதட்டு சாயங்கள் என்றான்.............