எப்படி எது கவிதை

நதி ஓடும்
கரையோரம்
கவி எழுத
தவித்திருந்தேன்..!

தாகம் தீர
தண்ணீர் அருந்திய
மான் கண்டேன்.
சோகம் மறைய
கூவும் குயில்
பாடல் கேட்டேன்.
சருகுகளின்
சலசல சத்தத்தில்
நயம் அறிந்தேன்.

மனம் முழுவதும்
ரசிப்புகள் தீண்டியது
என்ன எழுதுவது
என்று சிந்தையின்றி
வெறும் தாளை
நதி நீரில்
கசக்கி எறிந்தேன்.

வெறுமையில்
வெறுங்கையோடு
கண் முழித்தேன்.
கல்லூரி வகுப்பறையில்
கல்கி நான்
கனவிலிருந்து மீண்டேன்.

கவிதை எழுதுவது எப்படி?
இப்படித்தானோ?
பகல் கனவுதானோ?

சொற்களை கூட்டி
வரிகளை மடக்கி
நீட்டி அமுக்கினால்
கவிதை ஆகிவிடுமோ?

எழுதியவர் : கல்கி (2-Apr-14, 5:30 pm)
பார்வை : 421

மேலே