தமிழோடு விளையாடுவோம்
மீனவன் படகில் ஏராளம்
மீனவன் வீட்டில் இல்லை
பட்டவன் நெய்தான் தாராளம்
பட்டவன் போனான்;சேதாரம்
கல்லை பொறுக்கி நெல்லை விற்றான்
தில்லை வந்து கல்லை விற்றான்
நெல்லை வந்து நெல்லை விற்றான்
நெல்லை விற்று இல்லை வாங்கினான்
பாட்டவன் பாட கேட்டவன் மரித்தான்
கேட்டவன் பாட பாட்டவன் கொடுத்தான்
தொட்டவன் அன்று கெட்டவன் ஆனான் கெட்டவன்போனதால் தொட்டவனும் கெட்டான்
வார்த்தைகளை பின் வருமாறு பிரித்து பொருள் கொள்க :
பட்டவன் =பட்டு+அவன் , மீனவன்=மீன்+அவன் ,கல்லை=கல்+ஐ ,இல்லை=இல்(வீடு)+ஐ ,நெல்லை=நெல்+ஐ ,(ஒரு ஊர் திருநெல்வேலி )