வளமான பாரதத்தை வலுவேற்ற வாக்களிப்போம்

உண்மையை கடைப்பிடித்து,
நேர்மையை நிலைநிறுத்த
வறுமையை களைந்தெரிந்து,
நிலைமையை சரிசெய்ய
கடமையை காத்திங்கு,
பாரதப்பெருமையை நிலைநாட்ட
அருமைமிகு பிரதமரையும்,
அவர்கேற்ற அவைதனையும்
ஆள்காட்டி விரலாலே,
அழகாகத் தேர்ந்தெடுக்க
கரு மையை ஏற்றிங்கு,
கருமைதனை போக்கிடுவீர்.
ஆண்மையும் பெண்மையுமாய்,
திருவிணைந்த நங்கையரும்
தெளிவோடு வாக்களித்து,
நம்நாடுதனை காத்திடுவீர்.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (6-Apr-14, 12:27 pm)
பார்வை : 224

மேலே