வண்ணமாகட்டும் வாழ்க்கை
இருபக்கங்கள் உள்ளது இயற்கையே
இல்லையெனில் அது செயற்கையே !
இதயங்களிலும் இருபக்கம் உண்டு
இருப்பவரே உணரலாம் இதனையும் !
மாசற்ற மனங்களே மனிதராவர்
மாற்றங்கள் எதையம் தாங்குபவர் !
விட்டுக் கொடுப்பதே விவேகம்
விடாது விளங்குவதோ வீராப்பு !
எண்ணங்களை எருவாக்கி ஏற்பவரே
வண்ணங்களை வாழ்வில் காண்பவர் !
இயல்பாய் இருப்பதே என்றும் சிறப்பு
இயல்பை மாற்றினால் நமக்கு இழப்பே !
பலனை நோக்காது உதவிடும் உள்ளமே
பயனாய் தானாக வந்திடும் உவகையே !
கடந்ததை நினைத்து கவலை கொள்ளாமல்
நினைப்பவை நிறைவேற நடைபோடுவோம் !
பழனி குமார்