இனித்திடும் தேன்துளிகள்

செம்மையான கன்னத்தில்
செம்பருத்தி சாறு பூசி
வெண்ணிற சுழல் விழியில்
வெண்ணிலவு வீற்றிருக்க
சொக்க வைக்கும் அழகு கொண்ட
சோர்வில்லா குழந்தைகளின்
பொக்கைவாய் கொட்டும் எச்சில்
புளிப்பில்லாத் தேன்துளிகள் ........

கல்லொடித்தும் உறங்காமல்
காடுவெட்டி வளமாக்கி
சொல்லடங்கா துன்புற்றும்
சோர்வின்றி உழைக்கின்ற
நெல்விளைக்கும் உழவர்களின்
நெற்றிவியர்வை இந்நிலத்தில்
நித்தமும் பனித்துளியாய் விழுவது
உவர்பில்லாத் தேன்துளிகள் ...........

ஆற்றல்மிகு அவணிக்கு
ஆகாயம் மீதிருந்து
அழியாத அன்புவெள்ளம்
அளிக்கின்ற அன்னையைப்போல்
வைகறை முதல் யாமம்வரை
பொழிகின்ற தாய்மைமிகு
மழைத்துளிகள் எல்லாமே
மகிழ்வூட்டும் தேன்துளிகள் ...............!!!!



உமாபாரதி

எழுதியவர் : உமாமகேஸ்வரி கண்ணன் (6-Apr-14, 10:34 pm)
பார்வை : 167

மேலே