வான் நிலவும் விதவைதானோ 555
பெண்...
கரிசல் காட்டு பூமியில் களை
எடுக்கிறாள் தினம்...
நந்தவனத்திற்கு தினம்
நீருற்றுகிறாள்...
தினந்தோறும் பூக்கள்
பறிக்கிறாள்...
புன்னகை
முகத்துடன்...
சொல்லும் விலையில்
வாங்கி செல்லும் சிலர்...
விலைபேசி வாங்கி
செல்லும் பலர்...
எல்லோரிடத்திலும்
புன்னகையுன்...
பள்ளி குழந்தைகள்
வாங்கினால்...
அவளே சூட்டி
விடுகிறாள்...
ஏனோ இவள்
பறித்த மலரை...
இவள் சூட்டி கொள்ள
மட்டும் முடியவில்லை...
உள்ளத்தில் பல சோகங்களும்
கனவுகளும் இருந்தாலும்...
முகத்தில் மட்டும்
மாறாத புன்னகை...
மலரை பறித்த
கைகளுக்கு...
மலரை தாங்கும்
வலிமை இல்லை...
கூந்தலுக்கு வண்ண
மலர்களை பறித்தவள்...
வண்ண சேலை உடுத்த
வழியில்லை...
மாறுமா கணவனை இழந்து
வாடும் வஞ்சிகளுக்கு.....