ஆசான்கள்

ஆசான்கள்
~~~~~~~~~~~
வள்ளுவனார் தெள்ளமிழ்தால்
... ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
... சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
... யாரடி கொண்டார்
பள்ளியோடு மெள்ளமரந்
... தாரடி முறையோ ?
வண்ணமிகுத் தோரணையில்
... பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்துதனைப்
... “பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
... காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
... யாரதை ஏற்றார் ?
வெள்ளையுடைத் தாரகையும்
... வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
... கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
... தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
... தொண்டு புரிந்தார் !
வல்லகுறிக் கோளடையும்
... மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்லவிவே
... கானந்தர் வந்தார் !
நல்லறிவாய் உள்ளுறைந்து
... ஆனதி ருத்தீ
எல்லோர்க்கும் வள்ளலாரும்
... காண வகுத்தார் !
நாசுக்காய் நல்லவைகள்
... தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
... வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
... ஏங்கி நலிந்தே
காசுக்காய்க் கெட்டழியும்
... குப்பை களேபார் !