கூட இருந்தே குழி பறிப்பார் -குரு
குணமுடைத்தவரோடு பந்துவாகி சுயபோதமுரைபுரி
தயையதுவால் தன்குணகீர்த்தி துதிபுரி அதிகாரியாக்கி
குணமழி வித்துவத்தத்தால் பாங்குற பக்திகுழிபறித்து
தள்ளிடுவர் குணமற்றவர் கூடஇருந்தே குழிபறித்தே.
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
பொருள் :
-------------
1.மனிதர்கள் கொண்ட முக்குணம் :
1.சத்துவம்2.ரஜஸ் 3.தமஸ் --பிரம்மம் -குணமற்றது-அதனால் நிற்குணன் எனப்படும் அதனாலேயே இங்கு
குணமுடைத்தவரோடு என்ற பதம்.
2.அவரோடு (பந்து) சொந்தமாகி (சுயபோத) ஆன்ம போதம் உரை புரியும் கருணையால்
3.குருவின் குண கீர்த்தி துதி செய்யும் அதிகாரியாக்கி (தகுதியாக்கி )
4.மனிதர்களின் குணம் குறைத்து அதாவது மெல்ல நல்ல குணவான் ஆக்கி பின் குணமளிக்கும் தன் வித்துவத்தத்தால்
5.பக்திகுழிபறித்து
தள்ளிடுவர் குணமற்றவர் கூடஇருந்தே குழிபறித்தே.
6.குணமற்றவர் என குறிப்பது பிரம்ம சொருப மாய் விளங்கும் உத்தம குருவை .

