தேடல் பயணம் ------saro

காண்பது அரிதான அறமே !
கண்டவர் விண்டிலா தவமே !
கற்றறிந்த நற்றவத்தால் மெய்பொருளை
சுற்றிவந்தே தொழுதிட என்மனம்
வேண்டும் பொருள் நீயாக
தூண்டும் ஞானமெல்லாம் உன்னடிக்கு
மனமடக்கி மதி ஒளிர நன்னெஞ்சே
உன்னை காண்பது எந்நாளோ ???

பிரம்மம் தேடினால் பிரமிப்பு
சிரமம் மறையும் பெருமிப்பு !
தன்னை அறிவது ஞானம்
நீங்கும் குணமே அஞ்ஞானம் !
விளையும் பயனே மோட்சம்
விளங்கினால் அகலுமே ஆட்சேபம் !!!


சரோ

எழுதியவர் : சரோ (9-Apr-14, 1:05 pm)
பார்வை : 264

மேலே