எதற்கு இந்த பிறவி
வாழப்பிறந்த பிறவியென்று
வழிதேடி காத்திருக்க
வறுமையும் வருத்தமுதான்
என்னை வாட்டிஎடுக்குமோ .....
கடவுளிடம் கருணை வேண்டி
ஆலையம் போகையிலே
கடவுள்கூட அங்கு
களவு போய்விட்டான் ......
பாவத்தை தொலைக்க
மூழ்கி எழ வேண்டுமென்று
புண்ணிய நதிக்கு போனால்
புதைகுழியிலா சிக்கிகொல்வேன் .......
பரிகாரங்கள் கூட என்னை
பரசிகாசம் செய்கிறது
எழ முயல்கின்ற என்னை
எதிர்காலம்கூட ஏளனமாய் பார்க்கிறது ........
எதிர்நீச்சல் போட முயன்றும்
என்னுடைய நேரம்
வறண்டு போன குளத்து நீரிலா
மாட்டிக்கொள்வேன் ......
இலையுதிர் காலமெல்லாம்
வசந்தகாலத்திற்கு காத்திருக்க
நான் மட்டும் பட்டுப்போன
மரமாகிப் போவேனோ .......
சுட்டெரிக்க காத்திருக்கும்
சூரியன்கள் உண்டு
நிழல்தரும் மரங்கள்தான்
என்னுடன் இல்லை ....
இரைதேடும் கழுகைப்போல்
பணம்தேடும் மனிதனைத்தான் பார்க்கிறேன்
பாசக்கார மனிதனை
இதுவரையில் பார்த்ததில்லை ......
சூழ்நிலை காரியஸ்தர்கள்
எவ்வளவோ உண்டு
என் மனம் தேற்றிட
யாரும் இல்லை ......
வானம் நோக்கி பயணித்த
என் வாழ்க்கையில்
வழுக்கல்கல்தான் அதிகம்
சறுக்கல்கள் சாதாரணம் .......
விரலின் நுனியில் ஆடும்
விளையாட்டு பட்டம் போல்
இறைவன் கையில் ஆடிக்கொன்றுக்கிறேன்
எங்கும் நிரந்தரமில்லாமல் .......
காலத்தின் கேலி பார்வையில்
விதியின் விளையாட்டில்
வானம் நோக்கி பறப்பேனா
இல்லை நூல் அறுந்து வீழ்வேனா .......
வீழ்வதை பற்றி கவலை இல்லை
வாழ்க்கைக்காக வருத்தமும் இல்லை
நான் சேர்கின்ற இலக்கு
சாக்கடை மட்டும் வேண்டாம் ......
துரத்தும் துரோகிகளும் விரட்டும் விரோதிகளும்
நகைக்கும் நாடகதாரிகளுக்கும்
என் மரணம் ஏளன சிரிப்பிற்கு
இடமளிக்காமல் இருந்தால் சரி ......
வினாவையும் விடையையும்
எவனோ எழுதிவிட்டான்
நடுவிலே நான்தான்
நாடக பாத்திரமாகிவிட்டேன் ........
விடைதெரியாத கேள்விகளோடு
விழிபிதுங்கி நிற்கிறேன் இறைவா
விரைவில் எனக்கு விமோச்சனம் அளிப்பாயா
இன்னும் கூட வேடிக்கை பார்ப்பாயா ?