அறியாமையா பெரும்மிதப்பா
கத்தியின்று சத்தமின்றி 
யுத்தம் ஒன்று நடக்குது 
குளிர்பானத்தில் 
நச்சை கலந்து கலந்து விற்குது...!
 
குடிக்கும் மக்கள் நலனை கருதா
சதவீதத்தில் கமிசன் மட்டும் பார்க்குது!
வம்பை விலைக்கு வாங்கும் 
மனப்பாங்கு இங்கு மேலோங்குது...!!
 
கடைவிரித்து காசை பார்த்து 
மனுஷன் உயிரெடுத்து போகுது! 
சிந்திக்கவும் மனிதனில்லை 
எதிர்த்து பேசும் வாயைஎல்லாம் 
பணத்தைப் போட்டு அடைக்குது...!!
புதிதுபுதிதாய் நோய்களெல்லாம் உருவாகி 
மனுஷ சதையை பதம் பார்க்குது! 
எங்கு முளைத்ததென்று அறியாமலே 
மனம் கிடந்து தவிக்குது...!!
 
ஆரம்பித்த இடத்தில தான் 
புது மருந்துமங்கு பிறக்குது! 
ஐந்துக்கு போறதது ஐம்பது நூருனு 
கூவிக் கூவி விற்குது...!!
  
ஆபத்தாண்டவனாய் எண்ணி     
வாங்கி கொண்டு பெருமையாக பேசுது  
எங்கே செல்லும்....
இந்த கூட்டம்...!!
  
சிந்தையெல்லாம்... 
அடகு கடையில் சிக்குண்டு 
வாழ்க்கை முழுதும் 
வட்டி மட்டும் 
கட்டி கட்டித் தோற்க்குது...!!
 
வியாபாரிக்கங்கு மனம் 
கல்லாய் தானே கிடக்குது! 
விழிக்கவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல்...!
 
விடவும் முடியாமல் 
பெரும் தூக்கத்தில் மனம் கிடக்குது! 
ஓடியாடி சேர்த்ததெல்லாம் 
உடலுக்காக செலவழிக்குது...!!
 
பொழைக்கவந்த சீமானிடம் 
உயிரை அடகு வைத்து 
பிரமாதமென்று புகழுது 
உட்கார்ந்து உண்ணும் சீமானெல்லாம்    
தப்பு தாளம் போடுது...!!
 
மொத்த மக்க உயிரை பறிக்கும் 
சதியும் இங்கு நடக்குது 
அறியாமலே மனம் கிடந்து தவிக்குது 
வெளிநாட்டு மோகம் வந்து 
உள்நாட்டு தரத்தை எல்லாம் மறக்குது!!
 
                    

 
                                