காதுல பூ

விரலில் மை வைத்தவுடன்
காதிலே பூ வைக்கப் படுகிறது
அரசியல் வாதிகளின் பூக்
கூடைகள் எல்லாம் இந்த
தேர்தலில் காலியாகப் படுகிறது

ஒருதுளி மையால்
உரிமைகள் பறிக்கப் படுகின்றன
கடமைகள் எல்லாம் கல்லறைக்குள்
புதைகப் படுகின்றன
பெருமைகள் தூக்குப் போட்டு
தற்க் கொலை செய்து கொண்டன
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்
காற்றில் மறைந்து காணாமல் போயின
நாக்கு வியாபாரிகளின்
மூளை கெட்ட பேச்சால்
நமுத்துப் போனது தமிழ் நாடு

இயலாமை கல்லாமை முடியாமை
இவை எல்லாமும் நாங்கள் வைக்கும்
விரல் மையால் இல்லாமையாக வேண்டும்
நீங்கள் சேர்த்து வைத்த கோடிகளை எல்லாம்
சோத்துக்கு இல்லாதவர்க்கு பகிர்ந்து
அளிக்க வேண்டும் அதுவரையில் இந்த
தேர்தல் வாக் குறுதிகலும் வாய்ப் பேச்சும்
எங்கள் காதில் பூ சுற்றியவைகளே ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (11-Apr-14, 6:35 am)
Tanglish : kadula poo
பார்வை : 89

மேலே