சண்டை
இது ஒரு கணவன் மனைவி சண்டை
அது எப்படி முடிகின்றது
என்று ஒரு கற்பனை.
ஒரு நிமிடம்
ஒரு கடுஞ்சொல்
ஒரு ஆயிரம் இன்பங்கள்
தொலைந்து போகுமா?
விழிகள் கூட
கடிந்து கொண்டு
மௌனத்தையே விட்டு போகுமா?
சிரிப்புக்கும்,
அழுகைக்கும் இடையில்
பொல்லாத மனம்
உறங்கி விடுமா?
நீ பேசுவாய்
நீ பேசுவாய்
என்றே - துடிக்கும் உதடுகளும்
ஒட்டிக்கொள்ளுமா ?
எது எப்படியோ?
சண்டையோ
ஒரு நிமிடம்,
சமரசமோ பல நிமிடம்
இறுதியில்
சரசத்தில்
சரத்தின் சமரதில்
சமரசமாய்
தற்காலிகமாய்
மறைந்து போகும்
சடையின் சப்தங்கள்...