அத்தனை கனவுகளும்
பிறந்தது புத்தாண்டு
செழித்தது பூமி....
கொட்டியது மழை
கொழிக்குது விவசாயம்....
கிடைக்குது தடையில்லாத
குடிநீர் விநியோகம்,,,,
குறைந்தது விலைவாசி
இனித்தது வாழ்க்கை..
கிடைத்தது நிம்மதி
நடந்தது
நடக்காத திருமணங்கள் எல்லாம்....
வந்தது சந்தோஷம்
பெற்றோர் முகத்தில்....
குறைந்தது ஜாதி சண்டை
நிறைந்தது சிறந்த ஆட்சி....
எத்தனை எத்தனை
நல்ல நிகழ்வுகள்....
நடக்கட்டும் அத்தனை கனவுகளும்
இந்த ஜய புத்தாண்டில்...