=== அரசியல் வேகம் ===

இல்லாத சாலையும் இழைத்து வைக்கப்பட்டது
கட்டாத கழிப்பறைகளும் கட்டப்பட்டது
வெட்டாத குளமும் வெட்டப்பட்டது

போன மின்சாரம் போகாமல் கிடைத்தது
ஓடிய பேருந்தும் வழி மாறியது - நடுவிலிருந்த
பேருந்து நிறுத்தமும் ஊரோரம் போனது

எரியாத விளக்கும் அணைய மறுத்தது
மதுவும் ஓடா ஓட்டம் ஓடியது
கூட்டம் போட்டோருக்கு வயிறு நிரம்பியது

சொல்லாத திட்டங்கள் பலவும் நிறைவேறியது
வெள்ளம் வரும் வேகமாய் வேலை முடிந்தது
பள்ளம் மேடு இல்லா இடமானது

ஓராயிரம் வருடம் உரைத்தும் நிகழாதவை
ஒரு வாரம் முடியாமல் நிகழ்கிறது
இங்கே முதல்வர் வருகையால்

==உணர்கிறேன்==
என் நாட்டில் பணம் இல்லாமலில்லை
குணமோடு செலவிட மனம்தானில்லை
நாட்டை ஆள்பவர்களுக்கு(அரசியல்வாதிகளுக்கு)

உரிய நேரத்தில் வரவேண்டிய சினம்
வராததுதான் தொல்லை அவர்களை
ஆளவைப்பவர்களுக்கு(மக்களுக்கு ).

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (15-Apr-14, 12:53 pm)
பார்வை : 87

மேலே