கல்லுரி ...வசந்தம் விடைபெறாத சோலை
வசந்தம்
விடை பெறாத
சோலை ...
வாலிப ரோஜாக்கள்
பூக்கும் தோட்டம் ...
கண்களை மூடி
கனவுகளில் வாழவைத்து
ஏக்கத்திற்கு நெஞ்சத்தை
இரையக்கிவிட்டுப் போய்விடும்
இளமைத் தென்றல் வீசும் கடற்கரை ....
நிமதிச் சூரியன்
அஸ்தமமாகாத
இளமைகளின்
சொர்க்க பூமி...
நூற்றாண்டுகளுக்குப் பின்னும்
அழைத்துப் போகின்ற
புத்தகக் கப்பல்கள்
வலமிடும் துறைமுகம் ....
நாட்களை விற்று
அறிவை வாங்கிப் போகும்
பண்ட மாற்று முறை
மாறாத கிராமத்து சந்தை ....
வாழ்க்கைப் பாலையைக்
கடப்பதற்காக
அறிவு நீர் நிரப்பிக்கொள்ளும்
வற்றாத ஜீவநதி ....
உள்ள வயல்களில்
நட்புப் பயிர் வளர்கின்ற
உழவர்கள் வாழும் சேரி ...
ஒரு வழிப் பாதையில்
பயணம் போகும்
யாத்திரிகர்களின் மனதில்
அடிக்கடி
திரும்பத் தூண்டும்
ஆனந்தக் கச்சேரி அரங்கம்...
மயான பூமிக்கு
ஊர்வலம் போகும் வரை
மனதை விட்டு நீங்காத
மழலைப் பருவ விளையாட்டு மைதானம்....
வசந்தம் விடை பெறாத சோலை ........