தனிமைக் கவிதை
கவிதைக்கு
பஞ்சம் வருகிறது
என்னிடம்...
தனிமையை விவரிக்க
என் விரலிடை சினேகதியும்
சற்றே தடுமாற்றத்துடன்
முனை பதித்து
எழுதிக் கொண்டிருக்கையில்...
என் இதயச் சதுக்கத்தில்
உன் நினைவுகள்
ஏற்படுத்திய
சாலை மறியலால்
வார்த்தைகள் நேரிசல்களில்
சிக்கி காலத் தாமதத்துடன்
நிறைவு பெருகிறது
என் தனிமைக் கவிதை..!