போலிசும் கல்யாணமும் சிலேடை

தேடிப் பொருந்தப்பார்த்து நிச்சயித்து ஊரறிவித்து
சோடித்து நல்லோர்முன் கயிறிட்டு ஆசைகேட்டு
மூடிப்பிடித் திழுத்தெலும்பு நொறுங்க
அனைத்தனைத்து
கூடிமனிதரை பேணுந் தொழிலே.


விளக்கம் :
கல்யாணம்
பெண் தேடி பொரூத்தம் பார்த்து நிச்சயம் செய்து ஊரில் அனைவருக்கும் சொல்லி மண அலங்காரம் செய்து நல்லவர்கள் பெரியவர்கள் முன் தாலி கயிறிட்டு அன்று இரவு முதலிரவில் மண பெண் ஆசை கேட்டு கதவை மூடி கை பிடித்து இழுத்து எலும்பு நொருங்க அணைத்து அவளின் நெடு நாள் ஆசை தீ அனைத்தும் அணைத்து கூடி மனித குலம் வளர செய்யும் தொழிலே

போலீஸ்
தவறு செய்தவரை தேடி பலர் கை ரேகைகளுடன் ஒப்பிட்டு முடிவு செய்து தவறு செய்தவர் இவர் தான் என மீடியா மூலம் ஊர் மக்களுக்கு அறிவித்து சிறை ஆடை அணிவித்து மரண தண்டனை நாளின் போது நல்லவர்கள் என்று ஊர் நம்பும் சிலரின் முன் நிறுத்தி அவரின் ஆசை கேட்டு முகத்தை மூடி கயிறிட்டு அவர் நின்று கொண்டிருந்த தரையை ஒரு செயற்கை முறையில்(தூக்கிலிடு முறை )
இழுத்து கழுத்து எலும்பு நொருங்க அவரின் அணைத்து நாடியும் அணைத்து (அடங்க செய்து ) மணிதர்களை காக்கும் தொழில்

எழுதியவர் : ஆனந்தன் (21-Apr-14, 1:24 pm)
பார்வை : 484

மேலே