தமிழ் தொல்லையா
வார்த்தை விரிப்பது கவிதையா ?
==வாழ்கை சுமப்பது கவிதையா ?
பார்த்ததை எழுதினால் செய்யுளா ?
==பாவம் கவிபெண்ணும் பொய்யிலா ?
தீந்தமிழ் பாடல்கள் எல்லாம்
==டீன்தமிழர் பார்வைக் கில்லையா ?
பூந்தமிழ் பாடலால் இந்த
==எந்திரப் பூவுலகில் தொல்லையா ?
ஆங்கிலம் கலந்த தெல்லாம்
==அன்புத் தமிழ் பாடல்களா ?
சங்கத் தமிழ் பாக்களெல்லாம்
==உண்மையில் தேடல்களா ?
எல்லா வற்றிலும் நவீனம்
==எதிர் பார்கின்ற கூட்டங்களே
தொல்லைகளா தமிழ் பாடல்
==பதில் சொல்லிட்டு போவாயே
எனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டேன்
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் தமிழ் உலகே..................
விவேக்பாரதி
படம் : கருவிளம்