நகைச்சுவை 114

ஒரு நாள் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு குழுவாக தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டார்கள்.

யாத்திரைக்கு முன்னதாகவே அவர்களின் குரு அனைவரிடமும், "நாம் தீர்த்த யாத்திரை செல்லவிருக்கும் பல இடங்களில் பலவும் காண நேரிடலாம். குறிப்பாக பல புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்ய நேரிடும். அங்கு பெண்களும் ஸ்நானம் செய்வார்கள். அவர்களைக் கண்டு மனம் தடுமாறாமல் இருக்க வேண்டும். பெண் பாவம் பொல்லாதது. அப்படி மனம் தடுமாறாமல் இருக்க, "ஹரி ஓம், ஹரி ஓம்" என்று சொல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார். அனைவரும் சரியென்று ஒப்புக்கொண்டனர்.

ஒருநாள் குரு முன் செல்ல மற்றவர்கள் அனைரும் அவர் பின் நடந்தனர். அப்பொழுது அவர்களில் ஒருவன் "ஹரி ஓம்" என்று சொல்லவும், மற்றவர்கள் அனைவரும் ஒரே குரலில் "எங்கே எங்கே" என்றனர்.

எழுதியவர் : (23-Apr-14, 8:29 pm)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே