சிரிங்க கொஞ்சம் சிரிங்க

"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"
"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"
"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
________________________________________
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"
"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
________________________________________
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
________________________________________
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.."
"ஏன்..?"
"பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
________________________________________
"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்"
"ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"


நன்றி: தமிழ் கூடல்

எழுதியவர் : தமிழ் கூடல் (24-Apr-14, 5:52 pm)
பார்வை : 208

மேலே