வானமே கூரை - நரியனுர் ரங்கு

எல்லாந்தான் இருக்குதே
எல்லார்க்கும் கெடைக்குதா
சரி சமமாப் பங்கு வச்சி
சர்க்காரு கொடுக்குதா
சர்க்காரு கொடுக்கலன்னா - அதை
சாமியாச்சம் கேக்குதா
மலையாறு கடலிங்கே கொஞ்சமா
நெல் கரும்பு வாழை என்ன பஞ்சமா - நாங்க
பகலிரவாப் பட்டப்பாடு கொஞ்சமா - எங்க
பாடைக் கட்டும் மூங்கிலுக்கும் பஞ்சமா
அடுக்கடுக்க மாடி வீடு கொஞ்சமா - இங்க
அணிவகுக்க காரு வண்டி பஞ்சமா - நாங்க
கொட்டி வச்ச வேர்வைஎன்ன கொஞ்சமா - குழந்தை
தொட்டில் கட்ட கூரை உண்டா சொந்தமா
நெஞ்சொடிய நெஞ்சத் துணி கொஞ்சமா - செத்தா
போட்டுனுப்ப சட்டை உண்டா சொந்தமா - இது
நெசமாவே காந்தி பிறந்த தேசமா - நியாயம்
நடுத்தெருவில் அலையுது மசை நாயைவிட மோசமா
நரியனுர் ரங்கு செல் : 94420 90468