கனவுகள் கொடுமையானது கஸல்
உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
உன் பிரிவு
கோடைகாலப் போர்வை
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது