கண்ணீரின் காவியம்
நீ ...
என்னுள் ஓவியமாய் தீட்டப்பட்டவள் ..!
நீ ...
என் மூச்சுக்காற்றில் கலந்தவள் ..!
நீ ...
என் கரம் பற்றி வந்தவள் ..!
நீ ...
என்னையும் மனிதனாய் மாற்றியவள் ..!
நீ ...
எனக்கு உறவுகளை தேடித்தந்தவள் ..!
நீ ....
என்னையும் சாதிக்க வைத்தவள் ..!
நீ ...
எனக்கு கண்ணீரை தந்து போனவள் ..!
நீ ...
என் காதலை வீசிப்போய்விட்டாய் ..!
நீ ...
என்னை விட்டுப்போனாலும்
நீ ...
என்றும் என்னுள் கவிகளில்
நீ ..
கண்ணீராய் வாழ்வாய் ..!