அட்சய திருதியை

அட்சய திருதியை.....
====================
வணிகர்களின் புரளியிலே
வகையாக மக்கள் சிக்கி
மூளையை அடகு வைத்து
நடு இரவிலும் நகை வாங்கி....
அட்சயத் திருதியை
விசேட நாளினில்
ஆரம்பிக்கும் காரியங்கள்
அமோகமாய் வளர்ந்திடுமாம் ...
பொன்னகையை வாங்கிடுங்கள்
ஆண்டிற்கும் பெருகும் அது...
அநியாய விளம்பரங்கள்
நகைக் கடை அனைத்திலுமாய்...
வணிகரின் நரித் தந்திரம்
வியாபார விளம்பர உத்தி
அறிந்திடா மழுங்கிய மக்கள்
மூளையை அடகு வைத்தே...
அவன் சொன்னதெல்லாம்
நம்பி . நம்பி
ஆரம்பித்த காரியமாய்
கடன் பட்டும் வாங்கி வைத்த
நகை பார்த்தால்
ஒரு வருடம் ஆனபின்னும்
நீளவில்லை பெருக்கவில்லை
வைத்த அளவு வைத்தபடி...
பணமிருந்த இடத்தினிலே
நகை கிடந்து மின்னியது
பைத்தியமே.. பைத்தியமே.
நகைத்து... நகைத்து...
நகை கேலி பேசியது....
வணிகர்கள் கிளப்பிவிட்ட
புரளியினை அறியுங்கள்
ஒருவருட விற்பனையை
ஓர்நாள் நிகழ்த்தும்
வியாபார தந்திரங்கள்
அமோக விற்பனையில்
செழிப்பதென்னவோ
அவன் மட்டும்....
அட்சய திருதியை நன்னாளில்
துவங்கும் காரியமும்
துலங்கி நிற்கும் உண்மைதான்...
துவக்கியே வைத்திடுங்கள்
ஏழைக்கு தானம் செய்தலை
அன்னதானம் இடுங்கள்
இம்மகத்தான நன்னாளினில்
பட்டினியால் வாடும் ஏழை
பசியாரட்டும் உயிர் வாழட்டும்..
தொடரட்டும் தானம் தினமுமாய் .
ஏழை பசியாற்றியபடி...
ஏழைக்கு தானமென
இயன்றவரை அளிபோர்க்கு
ஏராளமாய் பொருள் பெருகும்
உண்மை பொருள் இது உணர்வீர்
ஆடை தானம் அளியுங்கள்
கந்தலாடை மக்களுக்கு
கிழிசலாடை
வெளிச்சம்போட்ட தேகங்கள்
உங்களது தானத்திலே
மூடி மறையட்டும்
மானம் காத்த புண்ணியமும்
உங்களுக்காகட்டும்...
இனியாவது உணருங்கள்
இந்நாள் சிறந்து நிற்பதெல்லாம்
நீங்கள் செய்யும் தானத்திலே
சிந்திப்பீர் நிதானத்திலே!!!