தீவிரவாதம்
தீவிரவாதம்
தீவிரமாய்
தலை விரித்து ஆடுவதால்
மனித நேயம் அழிந்து
நாடும் தீவிரமாய் அழியும்
அவல நிலையில் நாம் .......
தீவிரமாய் ஆய்கையில் ====
மனித உரிமைகளை தாக்கி
ஒற்றுமைஇன்மையை
வெளிச்சம் போட்டு காட்டி
வேற்றுமைகளை வளர்த்து
கருனைஅற்ற கொலைகளை
கவலைஅற்று செய்து
இயற்கையை
நாசமாக்கி
துப்பாக்கி முனையில்
இலக்குகளை அடையும்
தீவிரவாதிகளின் ஆக்கம் =====
வறுமையினாலா ??
படிப்பறிவு இன்மையினலா ??
பதவி ஆசையினலா ??
பணத்தின் மேல் உள்ள மோகத்தினலா??
நாகரீகமற்ற எண்ணங்களினால் ஆ??
சுந்தந்திரத்தை பறிப்பதற்கா ?
அடக்கு முறைகளினலா ??
இன வெறியாலா??
பாதிப்பில்
பாவப்பட்ட மக்கள்
அரசியலின் பின்னணியில் ....
திட்டமிட்டு
கணக்கிட்டு
சமூகத்தை
நாட்டை
மதத்தை
நாசமாக்கும்
தீவிரவாதம்
கொழுந்து விட்டு எரிவதன் காரணம்
நாம் அதை வளர்ப்பதால் அல்ல ...
அதை கண்டும் காணாமல் இருப்பதால் ......