மங்கையர் ஆட்சி
தேவனுக்கு பூஜை செய்தேன்,
தேவியையும் என் பூஜை சேரும்
என்று எண்ணம் கொண்டேன்
தேவரிலும் கொஞ்சம் இல்லற
பேதம் இருந்ததோ?
தேவி என்னை புறக்கணித்தது
அந்த காரணத்தினாலோ?
இனியும் அவள் பாராமுகம்
எனக்கு தேவை இல்லை
பூஜை செய்யும் போதினிலே,
தேவிக்கொன்று, தேவனுக்கொன்று
ஆரத்தியை செய்து விட்டேன்,
முகம் திருப்பி அருளும் தந்தாள்
மனம் நிறைந்து, நான் செழிக்க,
நல் வரமும் தந்தாள்
அங்கேயும் அவள் ஆட்சி,
இங்கேயும் என்னவள் ஆட்சி
மங்கையரை பகைத்து கொண்டால்,
எல்லாமே போச்சு