அனுபவ பயணமே ஆயுள் வரை

வாழ்க்கையின்
அனுபவம் தான்
வார்த்தை ஆகிறது..!
மனதின் வலிகள்
சுமந்தே வாழ்க்கை
அமைகிறது...!
வரிகள் சுமக்கும்
வலிகள் யாவும்
உணர்வில் மூழ்கிடும்...!
துன்பமும் இன்பமும்
தோல்வியும் வெற்றியும்
பிறப்பும் இறப்பும் பொதுவானதே...!
எதையும் தனக்கென
உணர்ந்த உள்ளத்திற்கே
அது உண்மையாய் தெரியும்..!
...கவிபாரதி...