மனிதம் உருவாக்குவோம்
வானம் பிளந்து கொட்டட்டும்
வறுமை ஒழியட்டும்.....
மழை பொழிய
பணக் கட்டி ஊறி
ஓங்கி அடிக்க
உதறும் துளியில்
கஷ்டம் உட்புகும்
ஓட்டை அடைக்கட்டும்....
கண்ணீர் ஊற்றிய
தேகசெடியில்
கஷ்டம் சிரிக்கட்டும்........
காற்று வீசி கலைக்கட்டும்
மனிதம் கலக்கட்டும்.....
வாழ்ந்தவர்கள் வழி வாழ
நாம் வரவில்லை,
மாற்றான் தேவையில்லை
உங்கள் மனம் போதும்.....