ஏக்கம்
திரும்பும் பார்வை எல்லாம் , என்னை விட ஏதோ ஒரு புனிதம்
என்னை விரும்பும் மனம் எல்லாமே புழுக்கள் போல் ஓர் உணர்வு
நான் தேடி அலைகின்றேன் நரகம் கூட சொர்க்கமாக
பசற்றுப்பேச்சுக்கள் பண்பாக தெரிவது ஏன் தானோ
என் மூளையில் ஏதோ முட்கம்பிகள் முக மூடி தொலைத்து
கண்ணீர் கூட கருவறையில் ஆரம்பித்ததோ பன்னீர்க்குடம் போலவே
மனதெல்லாம் ஒரு வெப்பம் மரத்துப்போகுதே மறைந்து போகுதே
கலிகாலம் சொல்லியே கனவை தொலைக்கின்றோம் கதவுகள் எங்கே கிடைத்தது
மானிடனாக பிறந்ததால் மரக்கட்டை ஆனேனா மனதை தொலைத்தேனா ?
மானம் என்ற ஒரு நரம்பு என்னில் முளைத்ததாள் ஒரு ஏக்கமா மனமே சொல்லு ?