ஓர்கனவு

நீர்வறண்ட பாதையில் சோர்ந்து சென்றுசேர்ந்த ஊர் அது,..,
ஆடு மேய்க்கப்போய்யிருந்தாள்...!
சத்தமற்ற காய்ந்தசோலை, தண்ணீரில்லாகுட்டைமேட்டில் பட்டமரம்பல இருக்க அங்கு ஏன்அமர்ந்தாளோ அன்னக்கிளி..!! வேள்ளகெடா ரெண்டு சண்டையிட, சாய்ந்தபடி சத்தமிட்டாள்..... காய்ந்தகாற்றில் வாசம்இல்லை பறித்துஉண்ண புளியங்காயும் இல்லை மண்படர்ந்த கண்ணத்தில் கைவைத்து பார்தவள்தான் இமைஇமைக்கும் காலத்திற்குள் ஓர்கனவு.....!! குளிர்காற்றில் உடல்உறைய இடை நினைத்த சின்ன சின்ன பனித்துளிகள் அட என்ன இது பல்கொட்டும் சத்தம் டக்டக்டக்டக்...
(வெள்ளைக்கெடா இன்னும் சண்டையை நிறுத்தவில்லை விரடிவிட்டாள்......)
கண்டகனவில் மிச்சம் என்ன.......
பல்கொட்ட நகர்ந்தவள்தான் பனிபடர்ந்த புல்தரையில் அமர்ந்தவள்தான் கொண்டவன் வருவதை பார்த்திருந்தாள்...... குளிர்கொள்ளா மன்னவன் ஓடிவந்து கட்டிக்கொண்டான் கண்ணம் தொட்டு முகத்தை நிமிர்த்தி கண்கள் தின்று உதடுசூழுத்தான்...... பொன்சிரிப்பில் அவன் மடிபடர்ந்தாள் கைநான்கை இருக்கிக்கொண்டு கதைநூறு பேசிக்கொண்டே மகிழ்ந்தவள்...!!
வான் இருட்ட அம்புலிமேல்வர, எழுந்து கொண்டாள், மன்னவன் கைசேர்த்து நகர்ந்தாள் குடில்அருகில் ஆற்றாங்கரையில் கால் நினைக்க அவன்கரம் விட்டாள்....? விட்டகரம் நீர்இறைக்க முகம் நினைத்து மேல்எழுந்தாள்...! லட்சம்நிலவின் ரம்மியம் தொட்டால் ஒட்டும் ஓவியம் பார்த்துக்கொண்டே, படர்ந்த தேன்றல் மூச்சழகில் மூழ்கித்தான் போய்விட்டான் அவன்....! அவள் அழகில் முத்தம்இட்டான் விழித்துக்கொண்டாள் அன்னக்கிளி....! விழித்த கண்அவனைத்தேட அங்கே?????
வேள்ளாட்டுக்கூட்டம் ஒன்று வேகமாய் பாய்ந்துவர புழுதிப்புயல் மூச்சடைக்க "கருத்த உடல் பெருத்ததொடை உருண்ட கை"கொண்ட கட்டபொம்மன் வந்தவன்...!! கண்டவள் ஓடிவிட்டாள் அவன் அருகே 'கனவின் இன்பம்'
இவள் 'சிரிப்பில் பிம்பம்' இங்கே....!!!!

எழுதியவர் : நன் (8-May-14, 9:42 pm)
பார்வை : 57

மேலே